ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. கைதான சைக்கோ வாலிபருக்கு மாவுக்கட்டு!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 7:59 pm
வேலுார் மாவட்டம் குடியாத்தம், கேவி குப்பம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ஓடும் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் முயற்சி செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து ரயில்வே எஸ்பி உத்தரவின் பேரில் ரயில்வே டிஎஸ்பிக்கள் பாபு (கோயம்புத்துார்), பெரியசாமி(சேலம்) ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையும் படியுங்க: தூக்கில் தொங்கிய பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோ : அவசர போலீசுக்கு குவியும் சல்யூட்!
இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று காலை ஜோலார்பேட்டை பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சுற்றித்திரிந்த ஹேமராஜை பிடிக்க முயன்றனர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கால் தடுக்கி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் அவரை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டது. கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.