ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அரசு பேருந்து நடத்துனர் கைது…மகளிர் போலீசார் நடவடிக்கை..!!
Author: Rajesh17 March 2022, 11:13 am
கோவை: ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குரூப் – 2 தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படிக்க திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவைக்கு சேலம் – கோயமுத்தூர் அரசு பேருந்தில் (TN 33-N3298) பயணித்தார். அப்போது பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த பூவேந்திரன் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் குற்றம் உறுதியானதால், காட்டூர் மகளிர் போலீசார் நடத்துனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.