இட்லி கடை நடத்தும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2025, 2:04 pm

இட்லி விற்கும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை தரும அடி கொடுத்து செருப்படியால் பதில் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் சாலை ஓரம் இட்லி கடை நடத்தும் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அந்தப் பெண் நடுரோட்டில் பலர் கண் முன் தர்ம அடி கொடுத்து இனிமேல் என் கண்ணில் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: தீவிர சிகிச்சையில் கங்கை அமரன்… திடீர் உடல்நலம் மோசமடைந்ததால் பரபரப்பு!!

கரீம் நகரில் சாலை ஓரத்தில் இட்லி கடை நடத்தும் பெண் ஒருவர் நேற்று இரவும் வழக்கம் போல் கடை போட்டு இருந்த நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேசிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த அந்தப் பெண் அந்த நபரின் சட்டையை பிடித்து நடுரோட்டில் வைத்த தர்ம அடி கொடுத்து இனிமேல் என் முன் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Sexual harassment of a young woman

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அந்தப் பெண்ணை தேடி பிடித்து புகாரை எழுதி வாங்கிக் கொண்ட போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இளம் பெண்ணின் துணிச்சல் பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 93

    0

    0

    Leave a Reply