தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் : போக்சோவில் சமூக அறிவியல் ஆசிரியர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 3:54 pm

பொன்னேரி அருகே எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தனியார் பாரத் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமூக அறிவியல் ஆசிரியர் ஆரோக்கியராஜ் (48) என்பவரை கைது செய்தனர்

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கராத்தே வகுப்பிற்கு சென்று வந்த நிலையில் மாணவிக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் வகுப்பறையில் தனியாக இருந்தபோது அவர் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!