சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் : அரசு தொடக்கப்பள்ளியில் அவலம்… ஆசிரியர் தலைமறைவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2023, 11:26 am

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 38). ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் அவர் அங்குள்ள 5ம்வகுப்பு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் ஆசிரியர் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.  அதனைத்தொடர்ந்து அவரை சஸ்பென்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். 

இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து போலீசார் ஆசிரியர் தேவ தாசை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பாதிப்புக்கு உள்ளான ஆந்தகுடி தொடக்க பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாகை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் பாலியல் தீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!