மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. போதையில் புத்தி மாறிய ஆசாமிகள்.. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 4:21 pm

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. போதையில் புத்தி மாறிய ஆசாமிகள்.. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முறப்பநாடு போலீசார் வடக்கு காரசேரியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரை கைது செய்தனர்.

மற்றொரு நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு சங்கத்தினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று முறப்பநாடு காவல் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சங்கத்தின் நிர்வாகிகள் 10 பேரை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறப்பநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என அவர் உறுதி அளித்ததின் பேரில் மாற்று திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அப்போது ஒரு வார காலத்திற்குள் குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மாற்று திறனாளிகள் சங்கத்தினர் அனைவரும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!