சக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. புகைப்படம் எடுத்து மிரட்டல் : கல்லூரி மாணவனின் லீலை..!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2024, 11:03 am

கன்னியாகுமரி மாவட்டம் வாத்தியார் வில்லை பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டன் என்பவரின் மகன் ஸ்ரீ தர்ஷன் (22). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார்.

இவருக்கு அதே கல்லூரியில் படித்து வரும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

அந்த நேரத்தில் ஸ்ரீ தர்ஷன் இளம் பெண்ணுடன் அடிக்கடி வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். அந்த நேரத்தில் அந்த இளம் பெண்ணுக்கு தெரியாமல் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரீ தர்ஷன் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீதர்சனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் அந்த 21 வயது இளம்பெண் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தனது தோழிகளை பார்ப்பதற்காக சென்று உள்ளார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீ தர்ஷன் அந்த இளம் பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து உள்ளார்.

பின்னர் ஆத்திரமடைந்த ஸ்ரீ தர்ஷன் அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதே போல அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேனியைச் சேர்ந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீ தர்ஷன் காதலிப்பதாக கூறி பழகி உள்ளார்.

மேலும் அந்த நேரத்தில் தனிமையில் இருந்த போது ஆபாச புகைப்படங்களை ஸ்ரீ தர்ஷன் எடுத்து வைத்து உள்ளார்.

அந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீ தர்ஷன் போட்டோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தகராறு செய்து உள்ளார். தொடர்ந்து இரண்டு
இளம் பெண்களும் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர் ஸ்ரீதர்ஷன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 308

    0

    0