மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தற்கொலை செய்த சிவராமனுக்கு உடந்தையாக இருந்த NCC மாஸ்டர் உட்பட இருவர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 11:19 am

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமனுக்கு போலி என்சிசி முகாம் நடத்த உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இந்த வழக்கில் தற்போது வரை 15 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வு குழுவினர் கோபுவை கைது செய்துள்ளனர்,

இதன் தொடர்ச்சியாக இன்று காலை நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி கருணாகரன் (32) என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இவர் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாகவும், சிவராமனின் அலுவலகத்தில் இருந்த Hard Disk-ஐ எரித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து கருணாகரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கருணாகரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரப்பம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தகராறில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தற்போது வரை 16 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 213

    0

    0