பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… சிக்கிய அறிவியல் ஆசிரியர் : ஒன்றுதிரண்ட பெற்றோர்கள்.. சக ஆசிரியர்கள் உடந்தையா?!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 11:01 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் ராமன் (வயது 43) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ராமனை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில்
பள்ளியில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இது குறித்து இரண்டு ஆசிரியர்களிடமும் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?