ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி மாணவனுக்கு பாலியல் தொல்லை ; கலை பயிற்சி பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

Author: Babu Lakshmanan
14 December 2022, 8:47 am

தூத்துக்குடியில் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலை பயிற்சி பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தூத்துக்குடி விஇ ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கலை பயிற்சி பள்ளியில் 14 வயது சிறுவன் சிலம்பாட்டம் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவனுக்கு பள்ளியின் முதல்வர் முபாரக் (40) என்பவர் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவனின் தாயார் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 492

    0

    0