பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை… கோவை மாநகராட்சி ஆணையரின் வாகனம் முன்பு படுத்து போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 9:50 am

பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்து கோவை மாநகராட்சி ஆணையரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88வது வார்டில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் நேற்று வேலையை புறக்கணித்து 88-வது வார்டு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், இரவு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தூய்மை பணியாளர்களை நேரில் சந்திக்க சென்றபோது, மாநகராட்சி ஆணையரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவருடன் வந்த சக உதவி ஆணையர், துணை ஆணையர் வாகனங்கள் முன்பு படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்குள் தூய்மை பணியாளர்கள் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கூறிய நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?