குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊர்காவல்படை வீரர்… ஆட்சியர் அலுவலகத்தில் இரு மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

Author: Babu Lakshmanan
18 May 2022, 6:38 pm

கன்னியாகுமரி : தனது குழந்தைகளுக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது தொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால், தாய் இரு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த சகாயலிசி சாந்தினி தனது 2 பெண் குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த சகாய லிசி சாந்தினி (34). இவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தண்ணீர் ஊற்றி மூன்று பேரையும் மீட்டனர். ஊர்காவல்படையை சேர்ந்த ஆன்றோ உதயம் (33) மற்றும் அவரது குடும்பத்தினர் தனது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை அந்த பெண் தெரிவித்துள்ளார்.

  • Vishal-Suchitra viral video நைட் டைம் என் வீட்டிற்கு வந்து என்ன பண்ணாருன்னு தெரியுமா…விஷாலை பகிரங்கமா தாக்கிய பாடகி சுசித்ரா..!
  • Views: - 1604

    0

    0