பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் சேட்டை… சீண்டிய நபரை நையப்புடைத்த பயணிகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 2:40 pm

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமா(28) தனது 8 வயது குழந்தையுடன் கேரளாவில் நடைபெற்ற தோழியின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று மீண்டும் திருப்பூர் திரும்பினார்.
பொள்ளாச்சி வந்த இவர் அங்கிருந்து திருப்பூருக்கு பேருந்தில் புறப்பட்டார். இவருடன் பேருந்தின் பின் இருக்கையில் பயனித்த சக பயணி ஒருவர் இவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

முதலில் ஹேமா எச்சரித்த நிலையில் அந்த நபர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த ஹேமா பேருந்தில் நடத்துநரிடம் புகார் தெரிவித்து சப்தமிட துவங்கி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்க துவங்கி உள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து அந்த நபரை மீட்ட நடத்துநர் திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவலர்களிடம் தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.

தகவல் தெரிந்து பேருந்து நிலையம் வந்த ஹேமாவின் கணவர் செல்வராஜ் மற்றும் ஹேமா கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 453

    0

    0