அரசு பெண்கள் பள்ளி அருகில் பாலியல் தொழில்.. கரூரில் வழக்கறிஞர் வீடியோ உடன் புகார்!

Author: Hariharasudhan
25 November 2024, 8:39 pm

கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் அருகில் ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக பரபரப்பு புகார் எழுந்து உள்ளது.

கரூர்: கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் அருகில் ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக, வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஆதாரங்கள் உடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் மனு அளித்து உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரூர் பசுபதி ஈஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து கொண்டு வந்திருக்கிறது.

இது குறித்து அப்பள்ளியில் பயிலும் சில மாணவிகள் என்னிடம் கூறினர். எனவே, இதனை வைத்து நான் கடந்த 3 மாதங்களாக தீர விசாரித்தேன். இது குறித்து எனது சார்பில் விசாரிக்கும்போது, அந்த ஸ்பாவில் நுழைவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாயும், உள்ளே Happy Ending என்ற பெயரில் பெண்களுக்கு தனியாக 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். இது போன்ற செயல் கரூரில் மட்டும் 4 இடங்களில் நடக்கிறது.

Karur advocate

இது குறித்தான அனைத்து ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. உள்ளே ஸ்பாவில் சென்ற உடன், பெண்களை அழைத்து வந்து, உங்களுக்குப் பிடித்த பெண்ணை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல், இந்த ஸ்பா, நகராட்சியின் அனுமதிச் சான்றிதழ் மற்றும் உரிமம் ஆகியவற்றுடனே நடைபெற்று வருகிறது. முதலில், இந்த ஸ்பாவில் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டும், யார் வருகிறார்கள், அவர்கள் என்ன சேவையைப் பெறுகிறார்கள் என்ற குறிப்பேடு இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: நடுவீட்டில் 3 நாட்களாக வைத்த தந்தையின் சடலம்.. ஊரே வெறுத்த சகோதரர்களின் நிலத்தகராறு!

முக்கியமாக இந்த ஸ்பாவில் வேலை செய்பவர்கள் ஒரு வருட காலம் தெரபிஸ்ட் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், ஆனால் இவை எதுவுமே அந்த ஸ்பாவில் இல்லை. இதற்காக தமிழக அரசில் தனிக் கமிட்டியே உள்ளது. இவ்வளவு இருந்தும் இவ்வாறு சுதந்திரமாக செயல்படுகிறது என்றால், அதிலும் குறிப்பாக கரூரில் உதவி ஆய்வாளார் நாகராஜ் வந்த பிறகே இவ்வாறு நடக்கிறது. அவர் பணமும் பெறுகிறார். எனவே, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 81

    0

    0