இதெல்லாம் தண்ட செலவு.. அதுக்கு இதை செய்யலாம்: அதிரடியாக பேட்டியளித்த நடிகை ஷகீலா..!

Author: Vignesh
30 September 2022, 3:30 pm

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகீலா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் பிரபல்யமானார். இதனை அடுத்து தற்பொழுது இவர் பிரபல சேனல் ஒன்றில் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகின்றார்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தொடுவிரல் என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிப்பதற்காக நேற்று சென்னிமலை வந்திருந்த ஷகிலா நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தற்பொழுது தமிழ் சினிமாவில் கேமராவில் நவீன தொழில் நுட்பங்களும் அதனை பயன்படுத்தும் தொழில் நுட்ப கலைஞர்களும் அதிகரித்துள்ளார்கள். இதனால் சினிமாவின் தரமும் உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் நடிகைகள் கூடுதல் செலவு வைக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதிக படங்களை தயாரிக்க முடியும்.

கேரவனுக்காக செய்யும் செலவில் பலபேருக்கு உணவு கொடுக்கலாம் என்றும் ஷகீலா தெரிவித்திருந்தார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 573

    0

    0