வெட்கமே இல்லாத அரசாங்கம்.. ஸ்டாலின் CM பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : H. ராஜா ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 4:50 pm

வெட்கமே இல்லாத அரசாங்கம்.. ஸ்டாலின் CM பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : H. ராஜா ஆவேசம்!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறுகையில், போதை பொருள் ஜாபர் சாதிக் செயல்பாட்டை கண்டிக்காத முதல்வர் மு க ஸ்டாலின்
நாளதான் தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி உள்ளது.

2000 கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் குற்றவாளியை கண்டிக்கவில்லை. நடவடிக்கை கூட நீங்கள் எடுக்காதது பரவாயில்லை. ஆனால் அவரை கண்டிக்க கூட இல்லை ஆனால் இந்த அரசாங்கம் போதை பொருளின் காடாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்

எப்ப பார்த்தாலும் திமுக அரசிற்கு என்ன இல்லையோ அதை பற்றி பேசுவது தான் இவர்களுக்கு வழக்கம். புதுகோட்டை மாவட்டத்தில் தற்பொழுது குடிநீர் தொட்டியில் சாணி கரைத்துள்ளனர். சமூகநீதி ஆட்சியில் சமூக அநீதி.

மேலும் படிக்க: குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்.. கைக்கோர்த்த இரு சமூக மக்கள் : ஆட்சியரிடம் பரபர புகார்!

திக திமுக ஒன்று தான். மலம் கலந்த விவகாரத்தில் இவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை சமூக நீதியின் மேல் எள்ளளவு கூட நம்பிக்கை இல்லாத முதல்வர் முதலில் இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் வெட்கமில்லாத அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது.

ஜாஃபர் சாதிக் போதை பொருளில் வந்த பணத்தை வைத்து மங்கை என்ற சினிமாவை எடுத்து வருகின்றனர் அந்த மங்கை படம் யாருடைய தொடர்பு உள்ளது என்று நீங்கள் மக்களுக்கு தெரிவியுங்கள் என்றார்

தமிழக முதலமைச்சர் ஐந்து நாள் ஓய்விற்கு கொடைக்கானல் சென்றுள்ளார் இது குறித்த கேள்விக்கு, இது என்னுடைய கருத்து அல்ல நான் சொல்ல மாட்டேன்.

மு க ஸ்டாலின் என்னுடைய நண்பர் தான். அவர் போல திமுகவில் நிறைய நண்பர்கள் எனக்கு உள்ளனர் அவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் பெட்டியை பாதுகாக்க இரவும் பகலும்கண்விழித்து பாதுகாக்கிறோம் ஆனால் இவர் குடும்பத்துடன் சென்று ஜாலியாக இருப்பார் என்று அவர்கள் பேசுகிறார்கள் அதை நான் சொல்லி இருக்கிறேன் இது என்னுடைய கருத்து கிடையாது என்றார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 344

    0

    0