சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் : முதலீட்டாளர்கள் அப்செட்!
Author: Babu Lakshmanan18 October 2023, 11:13 am
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் : முதலீட்டாளர்கள் அப்செட்!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 229.77 புள்ளிகள் சரிவடைந்து 66,198.32 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 46.30 புள்ளிகள் சரிந்து 19,765.20 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Cipla, Sun Pharma, Dr Reddys Labs, Hindalco, Tata Motors போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Bajaj Finance, Power Grid Corp, Bajaj Finserv, ICICI Bank, Axis Bank போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.20 புள்ளிகள் உயர்ந்து 80.80 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 2.53 புள்ளிகள் அதிகரித்து 53.30 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.05 புள்ளிகள் உயர்ந்து 19.90 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.49 புள்ளிகள் சரிந்து 11.01 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.