பல வருடங்களாக போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த ஷெட்டர் கொள்ளையன் : சைக்கிளில் மட்டுமே உலா வரும் இளைஞர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 6:48 pm

திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஷெட்டர் கொள்ளையன் மன்மதன் (எ) மதன்(28) சிறு வயதில் தாய் இறந்த நிலையில் 11ம் வகுப்பு வரை ஆங்கிலம் வழி கல்வி பயின்ற இவன் 16 வது வயதில் முதல் திருட்டை அரகேற்றியுள்ளார்.

அதில் ருசி கண்ட அவன் சிறார் என்பதால் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் வைத்து பின்னர் விடுவித்தனர். அதனால் திருவள்ளுர் மாவட்டத்தில் திருமுல்லைவயில், ஆவடி, டேங்பேக்ரி, மற்றும் சேத்து பட்டு உள்ளிட்ட இடங்களில் ஷெட்டரை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 4 முறை சிறை சென்றுள்ளான்,

திருவள்ளுர் மாவட்டத்தில் நன்கு தெரிந்த ஷெட்டர் கொள்ளையன் என்பதால் இடத்தை மாற்றி தென் சென்னை பகுதிக்கு வந்தான், இடம் முழுவதும் நன்கு பழக்கமாக பள்ளிக்கரணை யில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் வேளைக்கு சேரந்து அங்கேயே தங்கிய நிலையில் பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி பகுதியில் நன்கு வேவு பார்த்துளான்.

சூப்பர் மார்கெட்டில் மேற்பார்வையாளருடன் சண்டை போட்ட நிலையில் தன் வழக்கமான ஷெட்டர்களை உடைத்து கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தான்.

பள்ளிக்கரணையில் ஹேண்டா ஷோரூம், இ-சேவை மைய்யம், நிதி ஆலோசனை மய்யம் என பணம் அல்லது லேப்டாப் பொருட்கள் உள்ள கடைகளை குறிவைக்கும் மன்மதன் போலீஸ் சோதனையில் இருந்து தப்ப சைக்கிளில் மட்டும் செல்வான்,

குறிப்பாக முதல் மாடியில் உள்ள ஷெட்டரை உடைப்பது இவன் வாடிக்கை அதற்காக பகலில் நோட்டமிட்டுவிட்டு இரவில் அருகிள் உள்ள கட்டிடம் கட்டும் இடத்தில் கம்பிகளை எடுத்து செல்வதும், பாதுகாவலர்கள் தூக்கத்தில் இருந்தால் அவர்களின் போனையும் திருடி செல்வான்.

ஷெட்டர் உடைத்து பொருட்களை தன்னுடைய லேப்டாப் பேக்கில் எடுத்து செல்லும் இவன் மார்கெட்டில் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு அந்த பணத்தில் நல்ல புது உடைகள் வாங்கி கொண்டும் பாண்டிச்சேரியில் லார்ஜில் தங்கி மது குடித்து சொகுசாக சுற்றித்திரிவான், செலவானதும் மீண்டும் நடத்தும் திருடிய சைக்கிள்களில் சென்று கைவரிசை காட்டுவான்.

ஒரு இடத்தில் திருடினான் என்றால் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சியில் பின் தெடராவாறு போலீசை குழுப்பும் செயல்களில் கில்லாடியாக செயல்படுவான்,

நடந்து போன ஆள் எங்கே என தேடும் போது முள் வெளியில் புதரில் தங்குவதும் உடைகளை மாற்றிக்கொண்டு போவதும் வழக்கமாக கொண்டவன்,

கடந்த மே மாதம் முதல் பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் 7 கடைகளையும், வேளச்சேரி காவல் நிலைய எல்லையில் 3 கடைகள் என பணம், லாப்டாப், பொருட்களை கொள்ளையடித்துள்ளான்,

இவன் ஷெட்டர் உடைக்கும் காட்சிகள், கடையில் உள்ளே கல்லாவில் பணம் எடுக்கும் காட்சிகள் என சாலையில் 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை 1000 ஜி.பிக்கு சேர்த்து கொள்ளையனை பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் திபக்குமார் தலைமையிலான சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் முகிலன் உள்ளிட்டோர் பின் தெடந்துள்ளனர்,

தனக்கு என செல்போன் பயன்படுத்தாமல் திருடிய போனில் சிலருக்கு பேசிவிட்டு தூக்கியெரிந்துவிடும் பழக்கம் உள்ளதால் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி அவரின் தந்தை திருவண்ணாமலையில் விபத்தில் இறந்த தகவல் கிடைகாமல் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை, ஆனால் அஸ்தியை மெரினாவில் கரைத்துவிட்டு மீண்டும் பள்ளிக்கரணையில் கைவரிசை காட்ட சுற்றித்திரிந்தபோது போலீசார் தெரிவித்த அங்க அடையாளம் ஒத்துபோனதால் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சுற்றுவளைத்து கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!