அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… யூகேஜி பயிலும் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமையாசிரியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 9:23 pm

திருவண்ணாமலை : கங்கை சூடாமணி கிராமத்தில் யுகேஜி பயிலும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் செயல்படும் சாந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவியை பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியரியருமான காமராஜ் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டுக்குச் சென்ற குழந்தை தொடர்ந்து அழுவதை கண்டு பெற்றோர் உடலை பரிசோதனை செய்தபோது மர்ம உருப்பில் ரத்தம் வருவதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியுற்றனர்.

மேலும் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளதை கண்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கியதில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து மாவட்ட சைல்ட் தடுப்பு அலுவலர் மூலம் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, போளூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உடனடியாக ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்தனர்.

விசாரனையில் பள்ளி தாளாளர் மற்றும் அவரது கணவர் ஊரில் இல்லை என தெரிந்து கொண்ட காவல் துறையினர் அவர்களது கைபேசியை டிராக் செய்த போது திருச்செந்தூரில் இருப்பதாக காண்பித்தது துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் சென்று விட்டு வரும் வழியில் திருவண்ணாமலை காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை போலீசார் எட்டயபுரத்தில் வைத்துகைது செய்து திருவண்ணாமலை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 585

    0

    0