பிரபல குளிர்பான சேமிப்பு கிடங்கில் அதிர்ச்சி.. கொத்து கொத்தாக மீட்கப்பட்ட சிறுவர்கள் : திருப்பூர் அருகே ஷாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2023, 8:23 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலை எம்விஎஸ் நகரில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் 50 க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு பணி புரியும் பணியாளர் ஒருவர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு அங்கு வடமாநில சிறுவர்கள் பணி புரிந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் பல்லடம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.அவர்கள் 12 மணி நேரம் வேலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.அதனை தொடர்ந்து சிறுவர்களை மீட்ட அதிகாரிகள் திருப்பூரில் உள்ள காப்பகத்திற்கு பத்திரமாக அழைத்து சென்றனர்.

மேலும் விசாரணக்கு பின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?