அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…. குப்பைத் தொட்டியில் 2 சிசுக்களின் சடலம் : விசாரணையில் இறங்கிய போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2023, 10:43 am
திண்டுக்கல்லில் குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் 2 சிசுக்களின் உடல். சம்பவம் குறித்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.
திண்டுக்கல், மேட்டுப்பட்டி, புனித பிலோமினாள் பள்ளி அருகே மாநகராட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பையை அல்ல சென்றபோது குப்பை தொட்டியில் குறைமாத சிசுக்கள் 2 இறந்து கிடந்துள்ளன.
அதில் ஒரு சிசுவின் தலை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் பாதி உடலை நாய் கடித்து இழுத்துச் சென்று இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து உடனடியாக நகர் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசுக்களை யார் குப்பைத் தொட்டியில் வீசி சென்றனர்? இரண்டும் ஒரே தாய்க்கு பிறந்துள்ளதா? மற்றும் ஏதேனும் கள்ளத்தொடர்பு காரணமாக பிறந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையிலேயே குப்பைத் தொட்டியில் சிசுக்களின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்்பை ஏற்படுத்தியுள்ளது.