சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி தந்த அறிவிப்பு : இளவரசியின் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 1:46 pm

ஹில்கிரோ ஆடர்லி ரயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம் உதகை மலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் கல்லார் பகுதியில் கடந்த சில தினங்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கடந்த இரு தினங்களாக கல்லார் மற்றும் மலை ரயில் பாதை அமைந்துள்ள வனப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது

அவ்வாறு தொடர் மழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து தண்டவாளத்தில் ராட்சச பாறைகள் சரிந்து விழுந்ததது

இதனால் இன்று காலை வழக்கம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்ற ரயில் நிலச்சரிவு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் பணிகள் முடிய கூடுதல் நேரம் ஆகும் என்பதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 549

    0

    0