பெண்களே உஷாரா இருங்க: வங்கியில் பெண்ணை நோட்டமிட்ட இளைஞர்…அசந்த நேரத்தில் பணத்தை அபேஸ் செய்த அதிர்ச்சி CCTV காட்சி..!!

Author: Rajesh
15 March 2022, 5:41 pm

திருச்சி: வாகனத்தில் சென்று பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மர்மநபர் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா(46). இவர் ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து 1 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே இருந்து பார்த்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வீட்டிற்க்கு செல்லும் வரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பிரியங்கா தனது வீட்டிற்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது அவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்றுவிட்டார். இது குறித்து பிரியங்கா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண்ணிடம் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1613

    0

    0