சுற்றுலா பயணிகளை குறித்து வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் : கொடைக்கானலில் இளைஞர்கள் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 11:16 am

சுற்றுலா பயணிகளை குறித்து வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் : கொடைக்கானலில் இளைஞர்கள் கைது!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் அதிக அளவில் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களை விசாரித்ததில் மயிலாடுதுறையை சேர்ந்த நிஷாந்த் 22 , கொடைக்கானல் மேல் மலை பூண்டி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 30 ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.

கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்த நிஷாந்த், தமிழ் செல்வன், ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து போதை காளானையும் கைப்பற்றினர். கொடைக்கானல் மலை கிராமத்தில் போதை காளான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 410

    0

    0