கிரிக்கெட் விளையாடும் போது நொடியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் : ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2025, 1:21 pm

தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகின்றனர்.

இதையும் படியுங்க: மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!

இதே போன்ற சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.

விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது கிரிக்கெட் விளையாட்டு கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென்று மைதானத்தில் மயங்கி சரிந்தார்.

Shocking video of a student fainting and dying after playing cricket

சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அந்த மாணவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

மாணவனின் மரணத்திற்கு காரணம் வெயில் கொடுமையால் ஏற்பட்ட பிரச்சனையா அல்லது மாரடைப்பா என்ற கேள்வி இதனால் ஏற்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ