ரவுடியாக மாறிய தலைமையாசிரியர்.. அலுவலகத்தில் புகுந்து கல்வி அதிகாரியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 1:01 pm

திருநாவலூர் வட்டார கல்வி அலுவலரை ஆபாசமாக திட்டி அவர் மேஜையில் இருந்து தொலைபேசி மற்றும் பதிவேட்டினை தூக்கி வீசிய தலைமை ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேப்புலியூர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவர் சேகர். இவர் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து திருநாவலூர் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது தலைமை ஆசிரியர் சேகர் பள்ளியில் இல்லை என வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணா தலைமை ஆசிரியருக்கு 18 நாள் ஊதியத்தை நிறுத்தி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் இன்று திருநாவலூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த வட்டார கல்வி அலுவலரை ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர் மேஜையில் இருந்த தொலைபேசியை அடித்து நொறுக்கியும் அங்கிருந்த பணிப் பதிவேட்டினை தூக்கி அவர் முகத்தில் வீசி அவரை கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை மறித்து அங்கிருந்து வெளியேற்றினர்.

https://vimeo.com/729496250

வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ளே நுழைந்த தொலைபேசி அடித்து நொறுக்கி மற்றும் பணிப்பதிவேட்டினை தூக்கி வீசிய தலைமை ஆசிரியரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • Rajini Talk About Jailer 2 கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!