செம போதையில் மட்டையான விஏஓ… அலுவலகத்தில் குறட்டை விட்டு தூங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 4:57 pm

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரை தாழனூர் கிராம நிர்வாக அலுவலராக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்,
இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினமும் குடித்துவிட்டு பணிக்கு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்த நிலையில் இன்று அலுவலகத்தில் ஓவராக மது குடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடி தூங்கி கொண்டு இருந்துள்ளார்,

பல்வேறு ஆவணங்கள் பெறுவதற்கு பொதுமக்கள் வந்த போது போதையில் தூங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை அதிக நேரம் எழுப்பியும் எந்திரிக்காமல் போதையில் தூங்கியவாறு இருந்துள்ளார்,

பொதுமக்கள் உங்களிடம் எத்தனை முறை நாங்கள் சொல்வது குடித்துவிட்டு அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று என்று அவரிடம் கேட்டபோது ஒன்றும் தெரியாதது போல் அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதே போன்று கண்டாச்சிபுரம் தாலுகாவில் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக நேரத்தில் பணிக்கு வராமல் மதுபோதையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது, தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!