விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலத்திய போது நடிகர் விஜய் மீது காலணி வீச்சு.. உண்மையை கண்டுபிடிங்க : போலீசில் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 3:52 pm

விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலத்திய போது நடிகர் விஜய் மீது காலணி வீச்சு.. உண்மையை கண்டுபிடிங்க : போலீசில் புகார்!

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அன்று இரவு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வருகை தந்தார். அஞ்சலி செலுத்தும்போது விஜயகாந்தின் உடலை பார்க்க முடியாமல் கண்கலங்கி அழுதார். கடைசி 10 நொடிகள் விஜயகாந்தின் முகத்தையே பார்த்துக்கொண்டு கண்கலங்கினார்.

பின்னர், அஞ்சலி செலுத்துவிட்டு பிரேமலதா விஜயகாந்த் , விஜய பிரபாகரனை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு திரும்பினார்.

அப்போது கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை எடுத்து விஜய் மீது வீசினார். அப்போது கூட்டத்தில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது.

இந்நிலையில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் கடிதத்தில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று நடிகர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ