கொலைக் குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு.. தப்பியோடிய போது காலில் சுட்டு பிடித்ததால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 11:59 am

கொலை குற்றவாளியை கைது செய்த போது தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் என்பவர் பேருந்து நிலையம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் சச்சின் என்பவரை திண்டுக்கல் மாலைப்பட்டி சுடுகாடு பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது காவலர் அருணை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற ரவுடி ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் சுட்டு பிடித்தனர்.

இர்பான் கொலை செய்துவிட்டு கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அப்பொழுது அவர்கள் உடுத்தி இருந்த ஆடைகளை பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றனர்.

ஆடைகளை எடுத்து கொடுக்கும்போது காவலர்களை எதிர்த்து தாக்கியுள்ளார். காவலர் அருணை தாக்கி விட்டு சச்சின் ஓட முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.

அப்போது ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் காவலர்கள் அவரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து எச்சரித்துக் கொண்ட போலீசார் அவரை வலது கால் முட்டி பகுதியில் சுட்டு பிடித்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த ரவுடி ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!