கோவை ஒப்பணக்கார வீதி வைசாள் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பேன்சி கடைகள் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு பொருட்கள், ஆடைகள் வாங்க நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்களை கடை ஊழியர்கள் தங்களது கடைகளுக்கு முன் நின்று கொண்டு தங்களது கடைக்கு வரும்படி அழைப்பது வாடிக்கையானது.
இவ்வாறு வாடிக்கையாளர்களை அழைக்கும் போது கடைக்காரர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் தகராறு ஈடுபடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே இதனை கண்காணிக்க போலீசார் அடிக்கடி அந்த பகுதியில் ரோந்து செல்கின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடை ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரிய கடை காவல் நிலைய போலீசார் வீதி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஒப்பனகார வீதி சந்திப்பு, வைசாள் வீதியில் வாடிக்கையாளர்களை அழைப்பது தொடர்பாக கடைக்காரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது அங்கு இருந்த கடை ஊழியர்கள் சிலர் போலீசாரிடம் தகராறு ஈடுபட்டவுடன் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.
இதை அடுத்து போலீஸ்காரர் ரங்கராஜ் இது குறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அதிபதி, ஜவுளிக்கடை ஊழியர்கள் கரும்பு கடையை சேர்ந்த ஹக்கீம், சர்புதீன், உக்கடத்தைச் சேர்ந்த அன்சார், சாரமேடையை சேர்ந்த முகமது அஜ்மல் ஹுசைன், சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ஹரிவேந்தரா ஆகிய ஆறு பேரை போலீசார் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.