தேமுதிக மாநிலங்களவை சீட் கேட்கக்கூடாதா? நாங்க நிபந்தனை சொல்லக்கூடாதா? பிரமேலதா ஆவேசம்!
தேமுதிக தலைவரும், பொதுச்செயலாரும் ஆன பிரேமலதா அவரகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ஆளுநரின் செயலை குறித்தும் அத்துடன் ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநரின் வெளி நடப்பு குறித்து பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ” ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு முறையும் சட்டசபைக்கு வரும் பொழுது இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இது நாட்டுக்கும், மக்களுக்கும் ஆரோக்யமான விஷயம் கிடையாது. மேலும், ஆளுநரும் தமிழக அரசும் நகமும், சதையுமாக இணைந்து பயணித்தால் தான் நாட்டுக்கும், மக்களுக்கும் அது நல்லது.
இவர்கள் இருவரும் எதிரும், புதிருமாக இருந்தால் அதனால் பாதிக்க பட போவது தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆவார்கள். இது ஒரு வருந்ததக்க விஷயம், இது தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காதது எல்லாம் இன்று சட்டசபையில் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழக மக்களாகிய நம் அனைவருக்கும் ஏற்ப்பட்ட ஒரு தலை குனிவாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.
அதன் பின் கூட்டணி அலோசனை குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போது அவர் ஊடகங்கள் மீது குற்றச்சாட்டை வைத்தார். அவர் பேசுகையில், ” நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம், நான் தமிழில் தான் சொல்கிறேன், நாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே ஊடகங்கள் அதை தவறான கருத்தாக பதிவை செய்கின்றனர்.
மீண்டும் நான் சொல்கிறேன், அன்று மாவட்ட கூட்டணியின் ஆலோசனை முடிவடைந்த உடன் நான் ஊடகங்களை அழைத்து பேசினேன். அதில், எங்கள் மாவட்ட செயலாளர்களுடைய கருத்துக்கள் இன்று கேட்கபட்டுள்ளது எனவும் இது முதல் ஆலோசனை கூட்டம் தான் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கும் எனவும் அப்போது நாங்கள் எங்கள் இறுதி முடிவை சொல்வோம். மேலும், இது ஒரு விவாதம் தான் முடிவு இல்லை எனவும் நான் தெளிவாக கூறி இருந்தேன்.
அதில் மாவட்ட செயலாளர்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்பது சில மாவட்ட செயலாளர்களின் கருத்தாக இருந்தது.
திமுக, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது வேறு சில செயலாளர்களின் கருத்தாக இருந்தது. அதே போல், 2014 ஆம் ஆண்டு நடந்ததை போல 14 சீட் அளித்து மரியாதையாக வரவேற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது செயலாளர்கள் கருத்தே ஆகும்.
ஆனால், இன்று அனைத்து ஊடகங்களும் 14+ 1 சீட் கொடுத்தால் தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்கள் கூட்டணி அமைப்பர் என்று பதிவிடுகிறீர்கள்.
இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவு எடுக்கப்பட்டப்பின் அதிகாரப்பூர்வ தகவல் எப்போது வருகிறதோ அதுவே எங்களது இறுதி முடிவாக இருக்கும். அதனால், தவறான கருத்தை பதிவிடாமல் தயவு செய்து உண்மையான பதிவுகளை பதிவிடுங்கள், ” என்று தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.