அன்பக் காட்டுங்க.. மதிப்பு கொடுங்க.. சாத்தான்குளம் சம்பவங்கள் போல இனி நடக்கக்கூடாது : அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 4:27 pm

கோவை : சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு இன்று கோவை வந்தார். பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது : மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வரும் போது அவர்களிடம் அன்பாக பழக வேண்டும்.

சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியை போலீசார் தாக்கும் காட்சிகள் வெளியாகியது.

இது வருத்தத்திற்குரியது. போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். காவல் நிலையத்தில் பணியாற்றும் சக போலீஸ்காரர்களை வாடா போடா என அழைக்காமல் அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து பழக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!