எஸ்ஐ, 3 ஐடி அதிகாரிகள் அதிரடி கைது.. ரூ.20 லட்சம் வழிப்பறியில் சிக்கியது எப்படி?

Author: Hariharasudhan
18 December 2024, 1:31 pm

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த எஸ்ஐ மற்றும் 3 ஐடி அதிகாரிகளை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளனர். அப்போது, முகமது கௌஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல், அவர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து உள்ளார். இந்த நிலையில், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் என்பவர், முகமது கெளஸை நிறுத்தி உள்ளார்.

தொடர்ந்து, அவரிடம் எங்கு செல்கிறாய் என விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தோடு செல்வதாக முகமது கெளஸ் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்ஐ ராஜாசிங் கைப்பற்றி உள்ளார்.

20 lakh robbery by police si and IT officers in Triplicane Chennai

அதேநேரம், அளவுக்கதிமான பணத்தைக் கைப்பற்றியது தொடர்பாக ராஜாசிங், முறைப்படி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளார். ஆனால், இதனை தனக்குத் தெரிந்த மூன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளார். எனவே, நான்கு பேரும் தலா 5 லட்சம் ரூபாய் என 20 லட்சத்தைக் பங்கிட்டு கொண்டனர்.

இதையும் படிங்க: அதிகாலையில் மனைவி செய்த காரியம்.. பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த கணவர்.. அரியலூரில் என்ன நடந்தது?

இதனிடையே, எஸ்ஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரும் சேர்ந்து முகமது கெளஸை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட கெளஸ், இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன்படி, கூட்டு வழிப்பறி என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், திருவல்லிக்கேணி எஸ்ஐ ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து, கைதான 4 பேரிடமும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Anirudh jailer 2 Salary Details தாறுமாறாக சம்பளம் கேட்கும் அனிருத்…அதிர்ச்சியில் ஜெயிலர் 2 படக்குழு…!
  • Views: - 39

    0

    0

    Leave a Reply