குளத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலியல் புகாரில் சிக்கிய விவகாரத்தில் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளராகவும் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருபவர் ஆனந்த தாண்டவம். இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது, அங்கு புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது அந்தப் பெண் மதுரை ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அந்தப் பெண் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அது உண்மை எனத் தெரியவந்தது. இது தொடர்பாக தென் மண்டல ஐஜி-யிடம் விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் பெயரில் குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்ய தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.