திமுக கூட்டத்தில் உடன்பிறப்புகள் குஸ்தி… வருகை தந்த அமைச்சருக்கே எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 November 2023, 4:20 pm
திமுக கூட்டத்தில் உடன்பிறப்புகள் குஸ்தி… வருகை தந்த அமைச்சருக்கே எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரன் எழுதிய மந்திர கணங்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்புரையாற்றிய பின் கல்லூரி வளாகத்தில் வந்து கொண்டிருந்த பொழுது அவரை மரித்து நின்ற அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதி வீடூர் ஜெயராமன் தனது பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பிரகாஷ் தன் மீதும் தனது மகன் மீதும் போலீசில் தேவையற்ற பொய் வழக்குகளை பதியுமாறு கூறியுள்ளார்.
அதற்கு ஆதரவாக விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் தன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து தன்னை தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர். அவரிடம் கேட்டால் அமைச்சரும், அவருடைய மருமகனும் தான் உன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுகின்றனர் என கூறுவதாக அமைச்சரிடமே முறையிட்டார்.
அப்போது அங்கு வந்த வீடுர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பிரகாஷை பார்த்த ஜெயராமன் ஆத்திரமடைந்து தனது ஆதரவாளர்களை பிரகாஷை தாக்குமாறு சத்தம் போடவே பிரகாஷை தாக்குவதற்கு ஓடிவந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்த இடமே களேபரமானது. உடனே அங்கிருந்து மயிலம் பொம்மபுர ஆதீனம் வேகமாக ஓடிவந்து ஜெயராமனை சமாதானப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தரப்பும் ஜெயராமனை அழைத்து சமாதானப்படுத்த முயற்சித்தது. இருப்பினும் தீபாவளிக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் வீடூரில் தேவையற்ற பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அமைச்சரிடத்தில் தெரிவித்ததாக தெரிகிறது.
அமைச்சர் முன்னிலையில் உடன்பிறப்புகள் குஸ்தியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.