நிர்வாணமாக உடலில் விபூதியை பூசிக்கொண்டு காட்சி தந்த சித்தர் : காண வந்த அகோரிகளின் விநோத பூஜை.. பொதுமக்கள் வழிபாடு..!!
Author: Udayachandran RadhaKrishnan28 நவம்பர் 2022, 10:53 காலை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தகரக் கொட்டை சித்தர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியனை அகோரிகள் ஐந்து நபர்கள் பூஜை செய்தும், அதில் ஒருவர் தலைகீழாக நின்று பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.
கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலை அரவக்குறிச்சி அருகில், மலைக்கோவிலூர் பகுதியில் நெடுஞ்சாலை சென்ட்ரல் மீடியாவில் அமர்ந்திருந்த சுப்பிரமணி என்பவரை, மலைக்கோவில் சித்தர் என்று அழைத்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
அவரை அங்கிருந்து அருகில் இருந்த காலி இடத்தில் தகரக் கொட்டாய் அமைத்து அதில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து தகர கொட்டாய் சித்தராக உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்.
இவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர். பெயர் சுப்பிரமணி எனவும் அரசு பேருந்து செக்கராக பணிபுரிந்த இவர், குடும்ப பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்ததாக கூறுகின்றனர்.
கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக இவர் குடும்பத்தை விட்டு வெளியேறி வந்த இவரை அவரது உறவினர்கள் பல முறை அழைத்துள்ளனர். ஆனால், அவர் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இவர் இப்பகுதியிலேயே தங்கிவிட்டார். பின்னர், இவர் “மலைக்கோவிலூர் சித்தர், சுப்பிரமணிய சுவாமி சித்தர் ” என்ற பல்வேறு பெயர்களில் மக்கள் அழைக்க தொடங்கி விட்டனர். நிர்வாணக் கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தருகிறார்.
இந்நிலையில் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து 5 சித்தர்கள் இன்று அவரை பார்ப்பதற்காக வந்துள்ளனர், அப்போது ஒருவர் மட்டும் கால்களை தூக்கிக் கொண்டு பூஜை செய்துள்ளார்.
இதனை அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து அவரையும் வணங்கி நின்றனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் இவரை தரிசனம் செய்வதற்காக உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக மலைக்கோவில் சித்தர் என்று அழைக்கப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவரை சித்தராக வழிபடுகின்றனர் என்றும் ஒரு சிலர் மாவட்ட ஆட்சியரிடம் , காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
0
0