ரத்தத்தால் கையெழுத்து… அவங்க கேட்கறதும் நியாயம் தானே? சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 8:16 pm

ரத்தத்தால் கையெழுத்து… அவங்க கேட்கறதும் நியாயம் தானே? சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?

10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்துதுறை காலி பணியிடங்களில் நிரப்பி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற கோரியும், காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் 6750 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் என்ற தலைப்பில் இரத்ததால் கையெழுத்திட்டு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஏராளமான சத்துணவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரத்த கையெழுத்து இட்டு அரசுக்கு மனுவை அனுப்பினர்

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!