ஒலிம்பிக்கில் சிலம்பம் சேர்க்க வேண்டும் : தேசிய அளவில் சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 4:12 pm

கோவை : தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

யூத் கேம் பெடரேசன் ஆஃப் இந்தியா சார்பில் டெல்லியில் யூத் கேம் சேம்பியன்சிப் போட்டிகள் கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சிலம்பம், யோகா, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் கோவையில் இருந்து 10 பேர் சிலம்பம் போட்டிகளிலும் 4 பேர் யோகா போட்டிகளிலும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று ரயில் மூலமாக கோவை வந்த அவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிலம்பம், யோகா ஆசிரியர்கள் வினோத்குமார், வெங்கடேஷ் கூறுகையில், “சிலம்பம் யோகா போட்டிகளில் மட்டும் நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் ரவுத்ரா அகாடமி மாணவர்கள் 14 பேர் கலந்து கொண்டு 8 தங்கப்பதக்கங்கள் 6 வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளனர்.

மேலும், இதற்காக மாணவர்கள் 2 ஆண்டுகள் பிரத்யேக பயிற்சி பெற்றனர். இதில் 9 வயது முதல் 27 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலம்பம் போட்டி ஒலிம்பிக் போட்டிகளில் கொண்டு வந்தால் கோவை மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.”என்றனர்.

  • தமிழை மதிக்காத புஷ்பா 2 ..சாதனையில் கலக்கும் ட்ரெய்லர்…!
  • Views: - 983

    0

    0