துபாய் சென்றுள்ள நடிகர் சிம்பு அணிந்திருந்து BALMAIN பேண்ட் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர். தோல்வியில் துவண்டு போன நேரமெல்லாம் ரசிகர்கள் பக்க பலமாக இருந்து மீண்டு எழுந்தவர்.
உடல் எடை கூடி பட வாய்ப்பில்லாமல் இருந்த பின், மாநாடு படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்து மீண்டும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என நிரூபித்தார். தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்பட்டம் ஒன்றை சிம்பு பதிவிட்டுள்ளார்.
துபாயில் புகழ்பெற்ற அட்லாண்டிஸ் கட்டிடத்தின் முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மாடர்ன் உடையை அணிந்துள்ளார். அந்த உடையை பார்த்து வியந்த ரசிகர்கள், அது என்ன பிராண்ட், விலை என்ன என ஆராய்ந்த போது அதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகின் மிகவும் பிரபலமான பிராண்ட்களில் பால்மைனும் ஒன்று. 1945ம் ஆண்டு பிரான்ஸ் நாடில் உள்ள பாரிஸ் நகரத்தில் உருவாக்ப்பட்டது. திரைப்பிரபலங்கள், ராப் இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து பிரபலங்களும் இந்த ஆடையை அணிந்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பிராண்டு டீ ஷர்ட்டை அணிந்து வைரலாக்கினர். அந்த டீசர்ட் விலையே 40 ஆயிரத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த பேண்ட் என்ன விலையோ என்று ஆச்சரியமாக பதிவிட்டுள்ளார். சிம்பு அணிந்துள்ள அந்த பேண்ட் பால்மைன் என்ற பிராண்டைச் சேர்ந்தது. அந்த பேண்டின் விலை ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
சிம்பு நடிப்பில் தற்போது பத்து தல என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், அவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
This website uses cookies.