ஆங்கிலேயர்களோட சாயல்… பாரத தேசம் அழைப்பதால் ரொம்ப சந்தோஷம் : ஆளுநர் தமிழிசை கருத்து!!!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2023, 9:50 am
ஆங்கிலேயர்களோட சாயல்… பாரத தேசம் அழைப்பதால் ரொம்ப சந்தோஷம் : ஆளுநர் தமிழிசை கருத்து!!!
புதுச்சேரியில் கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, பெரும்பான்மை மக்களின் மனம் புண்படும் வகையில் உதயநிதி கருத்து கூறியுள்ளார். சனாதனம் என்பதை ஜாதி ரீதியில் கொண்டு செல்கின்றனர்.
இது தர்மத்தின்படி ஒரு வாழ்வியல். இந்த வாழ்வியலை முதலில் புரிந்து பேசுங்கள். புரியாமல் பேசுவது உங்களுக்கு விளையாட்டாக இருக்கலாம். அதை பின்பற்றுவோருக்கு அது விளையாட்டு அல்ல.
‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்’ என, பாரதி கூறியுள்ளார். பாரத தேசம் என்று அழைத்தால் மகிழ்வேன். கேரளா தற்போது கேரளம் என, மாறி உள்ளது. பம்பாய் என்பது மும்பை என மாறி உள்ளது. அதுபோல், பாரத தேசம் என சொன்னால் அது பெருமை தான்.
ஆங்கிலேயர்களின் சாயல்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை கொஞ்சம், கொஞ்சமாக நீக்குவோம் என, பிரதமர் கூறினார். அதன்படி பாரத தேசம் என அழைப்பது எனக்கு மகிழ்ச்சி என அவர் கூறினார்.