மாநாட்டை பாத்துட்டுதான் போவேன்.. சிங்கப்பூரில் இருந்து ஓடோடி வந்த விஜய் ரசிகை!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2024, 11:03 am

சிங்கப்பூரில் இருந்து பெண் ரசிகை ஒருவர் விஜய் மாநாட்டுக்காக ஓடோடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக அரசியல் முதல் மாநாடானது வருகின்ற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் நடைபெறுவதை முன்னிட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூரில் பானி செய்யும் பின் ரசிகை சிங்கப்பூரிலிருந்து ஓடோடி வந்துள்ளார்.

இந்தப் பெண் ரசிகை நான்கு நாட்கள் இங்கேயே தங்கி மாநாடு முடித்த பின்பு சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாநாடு சிறப்பான முறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கான பிரத்தியோகமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநாட்டு திடல் அழகாக அமைந்துள்ளதாகவும் நடிகை விஜயின் மூலம் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?