NH ரோட்டில் காருக்குள் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தினர் : மர்ம மரணமா? விசாரணையில் ஷாக்..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 2:30 pm

புதுக்கோட்டை மாவட்டம் நவநசமுத்திரம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் வேகனார் கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது.

இன்று காலை வரை அந்த கார் நின்று கொண்டிருந்த நிலையில் அந்த கார் நின்று கொண்டதற்கு எதிரே உள்ள நகர சிவ மடம் கட்டிடத்தில் வாட்ச்மேன் ஆக உள்ளவர் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார்.

அவர் காரில் ஐந்து நபர்கள் இறந்த நிலையில் கிடப்பதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர் காவல்துறையினர் விரைந்து வந்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முதல் கட்ட விசாரணையில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சேலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவருடைய மனைவி நித்யா மணிகண்டன் சேலம் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மணி எண்டர்பிரைசஸ் என்று தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இவர்கள் புதுக்கோட்டைக்கு எதற்காக வந்தனர் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: காட்டுப் பகுதியில் கிடந்த ஆண், பெண் சடலம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

இறந்தவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டல்லவா அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்

தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடிதம் எழுதிவிட்டதாகவும் அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

தற்போது கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஐந்து பேர் நூல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 625

    0

    0