மயக்க ஊசிக்கு மயங்காத கருப்பனின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம் : 2 பேரை கொன்ற ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்ததால் பதற்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2023, 4:58 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இவை அவ்வப்போது உணவு தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 1 வருடம் முன்பு தாளவாடி மற்றும் ஜீரகள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.
அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.
கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வந்தது. யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது
அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப் இருந்து கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவுசெய்தனர்.
மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத கருப்பன் யானை வனப்பகுதியில் தப்பி சென்றது. இதனால் யானையை பிடிக்கும் முயற்சி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உப்பட்ட ஜோரைகாடு, பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று முன் தினம் இரவு கருப்பன் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்தது.
இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.யானையை விரட்டும் முயச்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர் ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்தது.
பின்னர் அதிகாலையில் யானை தானாக வனப்பகுதியில் சென்றது. யானையால் 1 ஏக்கர் கரும்பு, முட்டைகோஷ், பீட்ரூட் பயிர்கள் சேதாரம் ஆனாது சேதாரம் ஆனா பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் யானையை விரட்ட நடவடிக்கை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என்றனர்.
0
0