அந்த மனசு தான் சார்….தனது ஊழியர்களுக்கு புல்லட் பைக்கை தீபாவளி பரிசாக வழங்கிய உரிமையாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 2:43 pm

அந்த மனசு தான் சார்….தனது ஊழியர்களுக்கு புல்லட் பைக்கை தீபாவளி போனஸாக வழங்கிய உரிமையாளர்!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டின் உரிமையாளர் தொழிலதிபர் சிவகுமார். இவர் தனது எஸ்டேட்டில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கும் ஆளுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை இந்தத் தீபாவளி போனஸாக வழங்கி அசத்தியிருக்கிறார்.

இதில் டிரைவர் முதற்கொண்டு மேனேஜர் வரை எல்லோருக்குமே டூவீலர்களை போனஸாக வழங்கியிருக்கிறார். திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார், கோத்தகிரி பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி மற்றும் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.

தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் பரிசு கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தீபாவளி பரிசு தனது கார் டிரைவர் முதல் எஸ்டேட் மேனேஜர் வரை 15 பணியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்.

மேலும் அவர்கள் விரும்பும் வாகனங்களை அறிந்துகொண்டு, பணிபுரியும் தனது தொழிலாளர்களுக்கு 15 இரண்டு சக்கர வாகனங்களை புக் செய்திருக்கிறார்.

பின்னர் 15 தொழிலாளர்களையும் அழைத்து, வாகனத்தின் சாவியைக் கையில் வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இரண்டு சக்கர வாகனத்தை வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ