கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தில் தனது தங்கையின் தற்கொலைக்கு காரணமான வாலிபரை குத்திக் கொன்ற அண்ணன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் குணா என்ற குணால் (24). இவர் தனது உறவினர்கள் உடன் வெளியூரில் பைனான்ஸ் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவருடைய மகள் தாமரைச்செல்வி என்பவர் குணாலை காதலித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் குணால் தாமரைச்செல்வியின் காதலை ஏற்க மறுத்ததாகவும், இதனால் மணமுடைந்த தாமரைச்செல்வி கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மகள் இறந்த துக்கத்தில் விஜயராஜனும் இறந்ததாக கூறப்படுகிறது.
தனது குடும்பத்தின் நிர்கதிக்கு காரணம் குணால் என்று விஜயராஜன் மகன் தர்ம மந்திரி (23) என்பவர் பலி வாங்கும் நோக்கத்துடன் இதே பகுதியில் இருந்துள்ளார். தனது குடும்பத்தில் தங்கை தாமரைச்செல்வி இறப்பிற்கும், தனது தந்தை விஜயராஜன் இறப்பிற்கும் குணால் தான் காரணம் என்று முன்விரோதம் கொண்டு, இவரை எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று தர்ம மந்திரி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
பூம்பாறை பகுதியிலேயே வேலை செய்து வந்த தர்ம மந்திரி இதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் காளி என்பவர் உடன் பூம்பாறை கோவில் திருவிழா முடிந்தவுடன், குணாலை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதை அடுத்து, நேற்று இரவு தனது நண்பர்களுடன் நடந்து சென்ற குணாலை வழிமறித்த தர்ம மந்திரியும், இவரது நண்பர் காளியும் தகராறு செய்துள்ளனர்.
அப்போது தர்ம மந்திரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணாலை பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த குணால் சம்பவ இடத்திலேயே பலியானார். குணாலை குத்தி விட்டு தர்ம மந்திரியும், இவரது நண்பர் காளியும் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி இறந்த குணாலின் தந்தை தியாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திக் கொன்றவர்களை தேடினர்.
தோட்டத்துப் பகுதியில் மறைந்திருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து குணாலை குத்திக் கொன்ற தர்ம மந்திரி மற்றும் இவரது நண்பர் காளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் தர்ம மந்திரி கூறியதாவது. கடந்த ஓராண்டிற்கு முன்பு தனது தங்கை தாமரைச்செல்வி குணாலை காதலித்து உள்ளார். தாமரைச்செல்வியின் காதலை குணால் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த தனது தங்கை விஷம் குடித்து இறந்ததாகவும், தனது தந்தை இந்த சோகத்தில் இறந்ததாகவும் தனது குடும்பமே நிர்மூலமானதற்கு குணால் தான் காரணம் என்ற காரணத்தினால் கடந்த ஓராண்டாக பழிவாங்க துடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
This website uses cookies.