மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

Author: Hariharasudhan
31 March 2025, 1:27 pm

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மெரினா கடலுக்குள் சென்ற இரண்டு இளம்பெண்கள், விபரீத முடிவில் இறங்கியுள்ளனர். அப்போது, இதனைக் கண்ட அங்கு ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் குமரேசன் மற்றும் காவலர்கள், உடனடியாக ஓடிச்சென்று இரண்டு இளம்பெண்களையும் காப்பாற்றி உள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மீட்கப்பட்ட இருவரும் சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் தங்களது பெற்றோருடன் தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். இதில், ஒரு பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொருவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

Marina Beach

இந்த நிலையில், அவர்களுடைய பெற்றோருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில், இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் சகோதரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளானர். இந்த நிலையில்தான், இளம்பெண்கள் இருவரும் விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

பின்னர், இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து, பெற்றோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். மேலும், சகோதரிகள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!