விசாரணை கைதி மீது துப்பாக்கிச்சூடு… போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது அதிரடி..!!
Author: Babu Lakshmanan26 February 2024, 9:56 pm
சிவகங்கை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற விசாரணை கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி, காளையார்கோயில் அருகே உள்ள கல்லுவழி கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி தினேஷை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விசாரணைக்காக தென்னீர்வயலுக்கு அழைத்து சென்ற போது, சார்பு ஆய்வாளர் சித்திரைவேலுவை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உஷாரான காளையார் கோயில் ஆய்வாளர் ஆடிவேலு, ரவுடி தினேஷை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், தினேஷ்குமார் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். பின்னர், அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற விசாரணை கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.