ஆடைகள் கிழிந்து அறையில் இருந்து கண்ணீர் மல்க வெளியே வந்த 6ம் வகுப்பு மாணவி ; பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள் ..!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 4:31 pm

சிவகங்கை அருகே ஆடைகள் கிழிந்து தலைமையாசிரியர் அறையில் இருந்து 6ம் வகுப்பு மாணவி அழுது கொண்டே வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எஸ்.காரைக்குடி கிராமத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பிரிட்டோ (53) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பில் 2 மாணவிகள், 3மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 6ம் வகுப்பு மாணவியின் யூனிபார்மை கிழித்து தலைமையாசிரியர் பிரிட்டோ தவறாக நடக்க முயற்சித்தாகவும், இதனால், அழுது கொண்டே மாணவி தனது பெரியம்மாவிடம் இது குறித்து புகார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 294

    0

    0