‘பைத்தியமாடா நீ ..? பைத்தியமா… போன வைய்டா *****’ ; சமூக ஆர்வலரை மிரட்டிய மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் : வைரலாகும் ஆடியோ

Author: Babu Lakshmanan
28 January 2023, 11:16 am

சிவகங்கையில் சமுக ஆர்வலரை செல்போனில் ஆபாசமாக மிரட்டிய மாவட்ட ஆட்சியரின் உதவியாளரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைகிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்த விவரங்களையும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் குறித்த விவரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இதில் அதிகாரிகள் வழங்கிய விவரங்கள் திருப்தி இல்லாததால், தகவல் ஆணையரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதரன் ரெட்டியின் உதவியாளர் சங்கர காமேஸ்வரன், சமுக ஆர்வலர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு ஏன் தேவையில்லாத விளக்கங்களை கேட்கின்றாய் என ஒருமையில் தகாத வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளச்சலுக்கு ஆலான ராதாகிருஷ்ணன், இது குறித்த சாலைகிராமம் காவல் நிலையத்தில் சங்கர காமேஸ்வரன் பேசிய செல்போன் ஆடியோ பதிவுடன் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ளனர்‌.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டதற்காக சமுக ஆர்வலரை, ஆட்சியரின் உதவியாளர் மிரட்டிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், பொது மக்களுக்கு பிரச்சினை என்றால் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இச்சம்பவம் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 562

    0

    0