சிம்புவை சைடு கேப்பில் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.. எதுல தெரியுமா.?

Author: Rajesh
7 May 2022, 11:34 am

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வருகிற மே 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க, விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டை பெரிய விழாவாக படக்குழுவினர் கொண்டாடினர். இதனிடையே, சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல் சிங்கிளும் நேற்று காலை வெளியானது.

இந்த பாடல் ரிலீஸ் ஆன முதல் ஏராளமான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். ஆனால் டான் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானதில் இருந்து சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஒரே நாளில் சிம்புவின் முதல் சிங்கிள், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் டிரெய்லர் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பல முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்த வருகிறார். சிம்புவின் முதல் சிங்கிள் வெளியிட்டை, சைடு கேப்பில் தட்டி தூக்கி இருக்கிறாரே சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  • Nagarjuna akkineni Families Appreciates Sobhita Decision பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!